Monday, May 23, 2016

முடக்கத்தான் கீரை

வேலிகள், பெரிய செடிகள், மரங்கள் மீது பற்றிப் படரும் கொடி வகையைச் சேர்ந்தது முடக்கத்தான் கீரை. முடக்கத்தான் கீரைக்கு முடக்கற்றான், முடக்கறுத்தான், முடர்குற்றான், மோதிக்கொட்டன் என்ற பெயர்களும் உள்ளன.

கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது என்பதாலேயே, முடக்கறுத்தான் எனப் பெயர் வந்தது. முடக்கத்தான் இலை, வேர் இரண்டும் ஏராளமான ருத்துவப் பலன்களைக்கொண்டவை.

முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால், வாத நோய்கள் நீங்கும், உடல் பலமடையும், மலம் இளகும், பசியைத் தூண்டும், கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும்.

முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து, ரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டுவந்தால், கை, கால் குடைச்சல், மூட்டுவலி நீங்கும்.

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம், வீக்கம், வலி இருக்கும் இடத்தில் கட்டுப்போட்டுவந்தால், வலி, வீக்கம் குறைந்து, நோய் குணமாகும்.

No comments:

Post a Comment