Monday, May 30, 2016

அகத்திக் கீரை


அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள். 


அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் செரிமானம் ஆகும்

அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
அகத்திக் கீரைச் சாற்றை சேற்றுப் புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.


உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்திக் கீரையின் இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி, அதை விழுதாக அரைத்துப் பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்திக் கீரையைச் சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம். அகத்தி கீரையைக் ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு உணவில் அகத்திக் கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு. எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகைப் படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,

அகத்திக் கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே" என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

அகத்தியை போற்றும் சித்தர் பாடல்:

மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு."

அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதில் வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செய்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு  வளரும். வயசான காலத்தில் சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாமல் முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே முடியாமலிருக்கும்..



இந்தமாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்க அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குகின்ற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு மகத்துவம் உள்ளது.

1 comment:

  1. https://thunivumagazine.blogspot.com/2011/10/bodhi-dharma-biography-tamil.html?showComment=1602761357717#c1413791278302916642

    ReplyDelete