Monday, May 30, 2016

அகத்திக் கீரை


அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள். 


அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் செரிமானம் ஆகும்

அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
அகத்திக் கீரைச் சாற்றை சேற்றுப் புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.


உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்திக் கீரையின் இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி, அதை விழுதாக அரைத்துப் பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்திக் கீரையைச் சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம். அகத்தி கீரையைக் ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு உணவில் அகத்திக் கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு. எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகைப் படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,

அகத்திக் கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே" என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

அகத்தியை போற்றும் சித்தர் பாடல்:

மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு."

அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதில் வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செய்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு  வளரும். வயசான காலத்தில் சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாமல் முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே முடியாமலிருக்கும்..



இந்தமாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்க அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குகின்ற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு மகத்துவம் உள்ளது.

Monday, May 23, 2016

தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கும் அற்புத ஜூஸ்!

ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தைப்படுவது தைராய்டு பிரச்சனையால் தான் . குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு தைராய்டு பிரச்சனையால் தான் இவ்வளவு கஷ்டம் என்று தெரிவதில்லை.
தைராய்டு என்பது தொண்டையின் நடுவே பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் தான் உடலின் பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது
இந்த சுரப்பியில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது உடலின் மற்ற பாகங்களிலும் பிரச்சனைகளை உண்டு பண்ணும். தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் ஏற்படும்.அவை:
* ஹைப்பர் தைராய்டு
* ஹைப்போ தைராய்டு
ஹைப்பர் தைராய்டு :-
ஹைப்பர் தைராய்டு என்னும் நிலை தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படுவதாகும்.
ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள் :-
ஹைப்பர் தைராய்டு ஒருவருக்கு இருந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும். அவை பெரிய கண்கள், அதிகமாக வியர்வை வெளியேறுவது, மிகுதியான சோர்வு, திடீர் உடல் எடை குறைவு, கவனச்சிதறல், வயிற்றுப்போக்கு போன்றவை.
ஹைப்போ தைராய்டு :-
தைராய்டு சுரப்பி போதிய அளவின்றி குறைவான அளவில் தைராய்டு ஹைர்மோன்களை சுரந்தால், அந்நிலையை ஹைப்போ தைராய்டு என்று அழைப்பர்.
ஹைப்போ தைராய்டு அறிகுறிகள் முகம் வீங்கி காணப்படுவது, உடல் பலவீனம், உடல் சோர்வு, மலச்சிக்கல், காரணமின்றி திடீரென்று உடல் பருமனடைவது, சரும வறட்சி போன்றவை ஹைப்போ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

இப்போது தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :-
சர்க்கரையில்லா கிரான்பெர்ரி சிரப் - 1 கப்
தண்ணீர் - 8 டம்ளர்
இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்
பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்
எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப்
செய்முறை :-
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வரலாம்.
உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் :-
இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங்களைக் காணலாம். அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார்மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.