Tuesday, June 9, 2020

உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்

குழந்தைகள் நோய்த்தொற்றுகள்,சுகாதார பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.பெரும்பாலான அம்மாக்கள் இன்று, தங்கள் குழந்தைகள் நோய்வாய்ப்படும் சாத்தியம் குறித்து கவலைப்படுகிறார்கள். குறிப்பாக இந்த குளிர்ந்த காலநிலையில் குழந்தைகளுக்கு பல தொற்றுநோய்கள் பிடிக்க வாய்ப்புள்ளது. குளிர் காலநிலை அவர்களை பல நோய்களுக்கு ஆளாக்குகிறது, அவை பொதுவாக குளிர் மற்றும் காய்ச்சல், தொண்டை தொற்று மற்றும் வயிற்று பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. 
குழந்தைகள் அதிக கவலையற்றவர்களாகவும், பெரும்பாலும் வெளியில் இருக்க விரும்புவதாலும், அவர்கள் நிச்சயமாக நோய்த்தொற்றுகள் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு மிகவும் பாதிக்கப்படுவார்கள். அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, வைட்டமின் சி நிறைந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் தேவைப்படுகின்றன. தினமும் அவர்களை எல்லா நேரங்களிலும் நீரேற்றமாக வைத்திருப்பது, பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவது மற்றும் கொட்டைகள் மற்றும் விதைகளை எடுத்துக்கொள்வது ஆகியவை சில தடுப்பு நடவடிக்கைகளாகும். 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இங்கே :
1. பழங்கள் மற்றும் காய்கறிகள்
அனைத்து பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன. இந்த உணவுக் குழுக்களில் கலோரிகள் குறைவாக உள்ளன; ஆயினும்கூட, அவற்றில் பெரும்பாலானவை வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, அவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு-பூஸ்டராக தினசரி உணவில் சேர்க்க சிறந்தவை கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, பெர்ரி மற்றும் காய்கறிகளான பூசணி, வெங்காயம், அடர் பச்சை இலை காய்கறிகள் போன்றவை. அனைத்து பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன
2. தயிர்
நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதன் மூலம் தயிர் நம்மை பலப்படுத்துகிறது. தயிர் ஒரு பாதுகாப்பு, தொற்று எதிர்ப்பு முகவராக பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. தயிர் நுகர்வை அதிகரிப்பது, நோய்த்தொற்று தொடர்பான நோய்களுக்கு நோய்த்தொற்றுகள் போன்றவற்றின் எதிர்ப்பை அதிகரிக்க உதவும். இந்த ஆரோக்கியமான சிற்றுண்டியில் கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, அவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகின்றன. தயிர் உங்கள் குழந்தைகளுக்கு முழுமையாய் உணர உதவக்கூடும்.

தயிர் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டாகும், இது கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது

3. புரதங்கள்
விலங்கு மூலங்களிலிருந்து வரும் புரதங்கள் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களின் ஏராளமான அளவுகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்கு அவசியமானவை. அவை மீன், கோழி, சீஸ், முட்டை மற்றும் பால் ஆகியவற்றில் காணப்படுகின்றன. சைவ உணவு உண்பவர்கள் சோயாபீன்ஸ், ராஜ்மா, சுண்டல் போன்ற தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் தங்கள் புரதத்தைப் பெறலாம்.

4. கொட்டைகள்
வால்நட் மற்றும் பாதாம் ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன, அவை உங்கள் உடல் நோயை எதிர்த்துப் போராட உதவும். ஒரு சிறிய ஆய்வில் ஒமேகா 3-க்கள் குழந்தைகளின் சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன. அக்ரூட் பருப்புகள் (வால்நட்) ஒரு சிற்றுண்டி கலவையில் அல்லது தானியத்தில் தெளிக்க எளிதானது.கொட்டைகள் நல்ல கொழுப்புகளின் மூலமாகும்

5. மசாலா பொருட்கள்
இந்திய சுவையூட்டிகள் மற்றும் பூண்டு, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்களில் வைரஸ் தடுப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலுக்குள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியையும் தூண்டுகிறது, மேலும் இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். பூண்டு குளிர் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது.

தூதுவளை

தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. பல்வேறு நன்மைகளை கொண்ட தூதுவளை நீல நிற பூக்களை கொண்டது. இதன் இலைகளின் பின்புறம், காம்புகளில் முட்கள் இருக்கும். தூதுவளை ஆயுளை கூட்டும் மருந்தாக விளங்குகிறது. இது, சளியை கரைக்க கூடியதாக அமைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.



தூதுவளை மருத்துவம்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.

தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.


Monday, May 30, 2016

அகத்திக் கீரை


அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள். 


அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் செரிமானம் ஆகும்

அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
அகத்திக் கீரைச் சாற்றை சேற்றுப் புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.


உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்திக் கீரையின் இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி, அதை விழுதாக அரைத்துப் பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்திக் கீரையைச் சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம். அகத்தி கீரையைக் ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு உணவில் அகத்திக் கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு. எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகைப் படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,

அகத்திக் கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

"அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே" என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

அகத்தியை போற்றும் சித்தர் பாடல்:

மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு."

அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதில் வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செய்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு  வளரும். வயசான காலத்தில் சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாமல் முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே முடியாமலிருக்கும்..



இந்தமாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்க அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குகின்ற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு மகத்துவம் உள்ளது.